யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டிச. 20 முதல் லாரிகள் ஸ்டிரைக்
புதுடெல்லி (ஏஜென்சி), 19 நவம்பர் 2008   ( 10:41 IST )
டீசல், டயர் ஆகியவற்றின் விலைகளை குறைக்காவிட்டால் டிசம்பர் 20 ஆம் தேதி முதல், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை, அதன் தலைவர் சரண்சிங் லஹோரா செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி குறைந்து, அதன் எதிரொலியாக சரக்கு போக்குவரத்துத் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எங்களிடம் இருந்து அரசு வரி வசூலித்து வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது. எனவே டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேன்டும். இதேபோல் டயர் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

நவம்பர் 19 ஆம் தேதிக்குள் (இன்று) எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள 50 லட்சம் சரக்கு வாகன (லாரி) உரிமையாளர்கள், டிசம்பர் 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு லஹோரா கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒரிஸ்ஸா: பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வாக்குமூலம்!
உ.பி. சாலை விபத்தில் 8 பேர் பலி
'பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அப்சல் குரு மரண தண்டனை நிறைவேற்றப்படும்'
இந்திராகாந்தி பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...