|
| 13 ஆண்டுக்குப்பின் எகிப்து அதிபருக்கு நேரு விருது |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 09:51 IST ) | |
13 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விருதை டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பெற்றுக் கொண்டார்.
எகிப்தின் பொருளாதார வளர்ச்சி, மேற்கு ஆசியாவில் அமைதி திரும்புவதற்காகப் பாடுபட்டது ஆகியற்றுக்காக, எகிப்து அதிபர் ஹோஸ்னி முகாரக்கிற்கு 13 ஆண்டுகளுக்கு முன் நேரு விருது அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் இதை நேரில் பெறுவதற்காக சூழல் ஏற்படாததால் முபாரக்கிற்கு விருது அளிப்பது தள்ளிப்போனது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முபாரக்கிற்கு டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஜவஹர்லால் நேரு விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த விருது ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டதாகும். விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|