|
| பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நட்வர்சிங் நீக்கம் |
| லக்னோ (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 17:32 IST ) | |
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவருமான நட்வர்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் நட்வர் சிங்கும், அவரது மகன் ஜெகத் சிங்கும் இணைந்தனர்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தற்போது நட்வர்சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பி.எஸ்.பி. பொதுச் செயலாளர் சதீஷ் சந்த்ர மிஸ்ரா, லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், மாநிலங்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட நட்வர்சிங் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது. அதனால் அதிருப்தியில் இருந்த நர்வர்சிங், கட்சி விரோத நடவடிக்கைகளில் இறங்கியதாகக் குறிப்பிட்டார்.
இதேபோல் சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் கொடுக்காத அதிருப்தியில் இருந்த நட்வர்சிங் மகன் ஜெகத் சிங்கும், கட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், அவரும் நீக்கப்பட்டதாக, சதீஷ் மிஸ்ரா கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|