யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் கோவிந்தாச்சார்யா
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 16:45 IST )
ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தவாதியும், பா.ஜனதா முன்னாள் தலைவருமான கோவிந்தாச்சார்யா மீண்டும் அரசியலுக்கு திரும்புவதாஅறிவித்துள்ளார்.

கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது "பா.ஜனதாவின் உண்மையான முகம் அத்வானிதான் ; வாஜ்பாய் முகமூடிதான் " என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சார்யா கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சை காரணமாக. பா.ஜனதாவுடனான தொடர்பை கோவிந்தாச்சார்யா துண்டித்துக் கொண்டார்.

அத்துடன் அரசியலிலிருந்தும் விலகுவதாக அறிவித்த கோவிந்தாச்சார்யா, கல்வி தொட்ர்பான பணிகளில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நீண்ட வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாக கோவிந்தாச்சார்யா இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பெரிய இரண்டு கட்சிகளும் பணக்காரர்களுக்கும், சிறுபான்மையினத்தவர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஆதரவாக ஆகிவிட்டன.எனவே தேசிய சக்திகளை ஒன்று திரட்ட இதுவே தக்க தருணமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாரதிய ஜனசக்தி கட்சித் தலைவர் உமாபாரதி, தமது கட்சியின் ஒட்டு மொத்த பொறுப்பாளராக கோவிந்தாச்சார்யாவை நியமிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,உமாபாரதியின் இந்த அறிவிப்பு குறித்து கோவிந்தாச்சார்யாவை செய்தியாளர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, கொள்கை அளவில் தாம் அதற்கு உடன்பட்டபோதிலும், நடைமுறையில் அதிலிருந்து வெளியே வந்து சிந்திக்க வேண்டியதுள்ளது என்று பதிலளித்தார் கோவிந்தச்சார்யா.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பார்வையற்றோர் ஓட்டு போட புதிய வாக்குச்சீட்டு!
உள்ளூர்வாசிகளுக்கே 80% வேலைவாய்ப்பு: மகா. அரசு
இந்து தீவிரவாதம் வார்த்தையே கூடாது : அத்வானி
ஒகேனக்கல்: பிரதமர் தலையிட எடியூரப்பா கோரிக்கை
பானிபட்டில் சாலை விபத்து: 16 பேர் பலி
நிதி நெருக்கடி விரைவில் தீரும் : ப. சிதம்பரம் நம்பிக்கை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...