யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பார்வையற்றோர் ஓட்டு போட புதிய வாக்குச்சீட்டு!
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 15:19 IST )
டெல்லி தேர்தலில் கண் பார்வையற்றவர்களும் வாக்களிக்க ஏதுவாக புதிய வகை வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்படவுள்ளன.

டெல்லி சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில், கண் பார்வையற்ற வாக்காளர்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கான பிரத்யேக 'பிரெயில்' மொழியில் வாக்குச்சீட்டுக்கள் அச்சடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 'பிரெயில்' மொழி தெரிந்த பார்வையற்றவர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியும்.

இந்த புதிய வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயர், க‌ட்சி பெயர் மற்றும் வரிசை எண் போன்ற தகவல்கள் 'பிரெயில்' மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த சீட்டில் கொடுத்திருக்கும் தகவலின் படி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்யமுடியும்.

இந்த புதிய முறையால், பார்வையற்றவர்களும் த‌ங்களது வாக்குரிமையை பயன்படுத்த வழி வகை ஏற்பட்டுள்ளது. முதன் முறையாக, இந்த புதிய முறை டெல்லி தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உள்ளூர்வாசிகளுக்கே 80% வேலைவாய்ப்பு: மகா. அரசு
இந்து தீவிரவாதம் வார்த்தையே கூடாது : அத்வானி
ஒகேனக்கல்: பிரதமர் தலையிட எடியூரப்பா கோரிக்கை
பானிபட்டில் சாலை விபத்து: 16 பேர் பலி
நிதி நெருக்கடி விரைவில் தீரும் : ப. சிதம்பரம் நம்பிக்கை
முல்லைப் பெரியாறு: ஜனவரி‌யி‌ல் விசாரணை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...