யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உள்ளூர்வாசிகளுக்கே 80% வேலைவாய்ப்பு: மகா. அரசு
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 14:47 IST )
தொழிற்துறைகளில் மகாராஷ்டிரா மாநிலத்தவர்களுக்கே 80 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் துறை செயலாளர் ஏ.கான் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 50லிருந்து 80 சதவீதம் வரை உள்ளூர் மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்கள் மராத்தி மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவர்கள் மராட்டிய மாநில மக்களாக கருதப்படுவார்கள்.

தொழிற்சாலைகளில் மராட்டிய மாநில மக்களை வேலைக்கு அமர்த்துவதை தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகியவை கண்காணிக்கும். இதை அமல்படுத்த மாநில அளவிலும் குழுக்கள் அமைக்கப்படும்.

சூப்பர்வைஸர் போன்ற மேற்பார்வைப் பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கவேண்டும். வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்து தீவிரவாதம் வார்த்தையே கூடாது : அத்வானி
ஒகேனக்கல்: பிரதமர் தலையிட எடியூரப்பா கோரிக்கை
பானிபட்டில் சாலை விபத்து: 16 பேர் பலி
நிதி நெருக்கடி விரைவில் தீரும் : ப. சிதம்பரம் நம்பிக்கை
முல்லைப் பெரியாறு: ஜனவரி‌யி‌ல் விசாரணை
காஷ்மீர் : முதல்கட்ட தேர்தலில் 39 % வாக்குப் பதிவு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...