யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இந்து தீவிரவாதம் வார்த்தையே கூடாது : அத்வானி
ராய்பூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 14:44 IST )
சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே 'இந்து தீவிரவாதம்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதாக பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி குற்றம் சாற்றியுள்ளார்.

ராய்பூரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக 'இந்து தீவிரவாதம்' என்ற புதிய வார்த்தை புழக்கத்திற்கு வந்துள்ளது என்றார்.

இது முற்றிலும் ஓட்டு வங்கி மற்றும் சிறுபான்மையினத்தவர்களை கவர்வதற்கான அரசியலாகும்.தீவிரவாதத்தை நாங்கள் ஒரு போதும் மதத்தோடு இணைத்ததில்லை.ஆனால் தற்போது வாக்குகளை பெறுவதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது.

வாக்குகளை பெறுவதற்காக எந்த ஒரு சமூகத்தினரையும் அவமதிக்கக்கூடாது.

முந்தைய தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் விட்டுவைக்கப்படவில்லை.அவர்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் தற்போதையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒரு தீவிரவாதி கூட பிடிக்கப்படவுமில்லை; தண்டனை பெறவுமில்லை.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு இன்னும் தூக்கிலடப்படவில்லை என்று அத்வானி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஒகேனக்கல்: பிரதமர் தலையிட எடியூரப்பா கோரிக்கை
பானிபட்டில் சாலை விபத்து: 16 பேர் பலி
நிதி நெருக்கடி விரைவில் தீரும் : ப. சிதம்பரம் நம்பிக்கை
முல்லைப் பெரியாறு: ஜனவரி‌யி‌ல் விசாரணை
காஷ்மீர் : முதல்கட்ட தேர்தலில் 39 % வாக்குப் பதிவு
வி.எச்.பி க்கு தடைவிதித்தால் கடும் விளைவு ஏற்படும் : பா.ஜ.
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...