யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஒகேனக்கல்: பிரதமர் தலையிட எடியூரப்பா கோரிக்கை
பெங்களூரு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008   ( 11:31 IST )
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழகத்துடன் நிலவும் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண உதவும்படி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தின் நகல் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில் எடியூரப்பா கூறியிருப்பதாவது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழகத்துடன் உள்ள கருத்து வேறுபாடு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு பலமுறை கடிதம் எழுதியது.

இந்த விவகாரத்தில் தீர்வு காண இரு மாநிலங்களுக்கு இடையே கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் பதிலளித்தது. ஆனால் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எவராலும் தடுத்த நிறுத்த முடியாது என்று தமிழக முதல்வரும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட நீங்கள் (பிரதமர்) தலையிட வேண்டும். இது தொடர்பாக தங்களை தனியாக நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பானிப்பட்டில் சாலை விபத்து: 16 பேர் பலி
நிதி நெருக்கடி விரைவில் தீரும் : ப. சிதம்பரம் நம்பிக்கை
முல்லைப் பெரியாறு: ஜனவரி‌யி‌ல் விசாரணை
காஷ்மீர் : முதல்கட்ட தேர்தலில் 39 % வாக்குப் பதிவு
வி.எச்.பி க்கு தடைவிதித்தால் கடும் விளைவு ஏற்படும் : பா.ஜ.
ஜம்முவில் பாலம் இடிந்துவிழுந்து 25 பேர் பலி!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...