|
| முல்லைப் பெரியாறு: ஜனவரியில் விசாரணை |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 09:00 IST ) | |
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அதன் பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்தும், அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பியும் வந்தது.
இதை தொடர்ந்து, அணையின் பாதுகாப்பை மத்திய நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை நிபுணர் குழு அணையை ஆய்வு செய்தது. இந்த அறிக்கையை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதேபோன்று, கேரள அரசு சார்பில் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு மாநில அரசுகளின் அறிக்கை மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 20, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தொடர்ந்து 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|