|
| காஷ்மீர் : முதல்கட்ட தேர்தலில் 39 % வாக்குப் பதிவு |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 17:48 IST ) | |
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடபெற்ற 10 சட்டசபை தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தலில் 39 சதவீதம் வாக்குகள் பதிவானது.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் முதல் கட்டமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குரேஸ், பந்திபோரா, சோனாவாரி தொகுதிகளிலும், லடாக் மற்றும் சுரன்கோட் பகுதியில் உள்ள லீ, கார்கில், நோபகரா மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள மெந்தார், பூஞ்ச், ஹாவேலி ஆகிய 10 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
இந்நிலையில் வாக்களிக்கக் கூடாது என்ற தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் கடுமையான குளிர் ஆகியவற்றையும் மீறி வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலுக்காக 1038 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில்,வாக்காளர்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பொதுவாக பெரிய அளவில் வன்முறை சம்பவம் ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக தெரிவித்த தேர்தல் கமிஷன் ஆணைய அதிகாரி, மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தபோது சராசரியாக 39 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|