|
| ஜம்மு - காஷ்மீர் : 5 ஆவது கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியீடு |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), 17 நவம்பர் 2008 ( 13:27 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான 5 ஆவது கட்ட தேர்தல் அறிவிக்கையை மாநில ஆளுநர் வி.என்.வோரா இன்று வெளியிட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில், புல்வாமா, ராஜ்போரா உள்ளிட்ட 11 தொகுதிகளில் வருகிற டிசம்பர் 13 ஆம் தேதியன்று 5 ஆவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் அறிவிக்கையை வோரா இன்று வெளியிட்டார்.
அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 24 ஆகும்.வேட்பு மனு மீதான பரிசீலனை அதற்கு அடுத்த தினம் நடைபெறும்.வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 27 ஆம் தேதியாகும்.
11 தொகுதிகளிலும் 1,089 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.மொத்தம் 8,38.953 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாவர்.இதில் 4,01,833 பேர் பெண்களாவர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|