|
| எல்லையில் இந்திய வீரர் சுட்டுக்கொலை! |
| ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 13:17 IST ) | |
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 வீரர்கள் மாயமாகினர்.
ஜம்முவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பெரி வனப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு கடந்த 5 தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது.
இதையடுத்து, தீவிரவாதிகளை பிடிப்பதற்காக ராணுவ வீரர்கள் வனப்பகுதியில் நுழைந்தனர். கடந்த 5 தினங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 2 வீரர்களை காணவில்லை.
இதையடுத்து, அந்த பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் தீவிரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
 | | | பாலா படத்தில் கார்த்தி! | | 'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ தொலைக்காட்சி தயாரிக்கும் புதிய படத்துக்கு பாலா ஒப்பந்தமாகியுள்ளார். பாலாவின்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|