|
| மாலேகாவ் : ராணுவ அதிகாரி மீது மேலும் ஒரு வழக்கு |
| நாசிக் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 12:20 IST ) | |
மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் மீது போலி ஆவணங்களை காட்டி ஆயுத லைசென்ஸ் பெற்று கொடுத்ததாக மேலும் ஓரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனேவை சேர்ந்த யஷ்வந்த் தத்தே என்பவருக்கு, புரோஹித் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடந்த 2005 ஆம் ஆண்டில் ஆயுத லைசென்ஸ் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதற்காக அவரிடமிருந்து 20,000 ரூபாயை பெற்றுக் கொண்ட புரோஹித், தத்தே தேவ்லாலி ராணுவ முகாம் ஒன்றில் வசிப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து அவருக்கு ஆயுத லைசென்ஸ் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக புரோஹித் கைதானதை அறிந்த தத்தே, புரோஹித் தமக்கு பெற்று தந்த ஆயுத லைசென்ஸ் சரிதானாம் என்பதை சரிபார்க்க முடிவு செய்தார்.அப்போதுதான் போலி ஆவணங்களை சமர்ப்பித்து புரோஹித், தனக்கு ஆயுத லைசென்ஸ் பெற்று தந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தத்தே தாமாகவே முன்வந்து சர்க்வாடா காவல் நிலையத்தில், இது தொடர்பாக புகார் செய்தார்.
இதனையடுத்து புரோஹித் மீது போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் 420, 465, 468,471 மற்றும் 474 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக புரோஹித் இம்மாதம் 18 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|