யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்முவில் நாளை முதல் கட்டத் தேர்தல்
ஸ்ரீநகர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008   ( 15:08 IST )
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதல் கட்டமாக நாளை 10 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 87 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில், முதல் கட்டமாக நாளை பாண்டிபுரா, கார்கில், லே, பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல் கட்டத் தேர்தலில் மொத்தம் 102 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். இவர்களுக்காக 1038 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லே மாவட்டத்தில் ஒரு இடத்தில் 5 வாக்காளர்களே உள்ளனர். அவர்களுக்கென பிரத்யேகமாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கரையைக் கடந்தது கைமுக் புயல்
நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே சரண் ; கைது
பெண் சாமியார் கைது 'தேர்தல் தந்திரம்' : பா.ஜனதா
மத்திய அரசு உத்தரவை மீறியது ஒரிஸ்ஸா
வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடம்
" 'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு "
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...