யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கரையைக் கடந்தது கைமுக் புயல்
சென்னை/ ஐதரபாத் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008   ( 12:30 IST )
வங்கக் கடலில் உருவான கைமுக் புயல், இன்று காலை நெல்லூர் அருகே கரையைக் கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவடைந்து நேற்று முன்தினம் புயல் சின்னமாக மாறி, ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இது, நேற்று மசூலிப்பட்டிணத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

கமுக் என்று பெயரிடப்பட்ட இந்த புயலின் காரணமாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர்- பாபட்லா இடையே காவலி அருகே கமுக் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடந்து விட்டாலும் இன்று முழுவதும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க இன்று கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அது எச்சரித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே சரண் ; கைது
பெண் சாமியார் கைது 'தேர்தல் தந்திரம்' : பா.ஜனதா
மத்திய அரசு உத்தரவை மீறியது ஒரிஸ்ஸா
வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடம்
" 'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு "
ச‌ட்டீஸ்க‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌மீது தாக்குதல்: பொ‌றியாள‌ர் ப‌லி!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...