|
| நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே சரண் ; கைது |
| புதுடெல்லி (ஏஜென்சி), 15 நவம்பர் 2008 ( 16:34 IST ) | |
ஜாம்ஜெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவையடுத்து மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
வட இந்தியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டு விதமாக பேசியதாக ஜாம்ஜெட்பூர் ஜூடிசியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராஜ் தாக்கரே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தவறியதால், ராஜ் தாக்கரேவுக்கு எதிராக அந்நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ராஜ் தாக்கரே மும்பை நீதிமன்றம் ஒன்றில் இன்று நேரில் சரணடைந்தார்.ஆனால் அவர் சரணடையவில்லை என்றும், தாங்கள் அவரை கைது செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் ராஜ் தாக்கரே வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஏற்று அவரை நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
ராஜ் தாக்கரேவுக்கு எதிராக ஜாம்ஜெட்பூரில் 4 வழக்குகளும்,ஜார்க்க்கண்டில் உள்ள ஜாம்தாரா, கர்வா மற்றும் தன்பாத் ஆகிய இடங்களிலுள்ள நீதிமன்றங்களில் தலா ஒரு வழக்கும் பதிவாகியுள்ள நிலையில், தமக்கு எதிராக உள்ள இந்த வழக்குகளையெல்லாம் மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி ராஜ் தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|