யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பெண் சாமியார் கைது 'தேர்தல் தந்திரம்' : பா.ஜனதா
இந்தூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008   ( 16:01 IST )
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டது ஒரு 'தேர்தல் தந்திரம்' என்று பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாற்றியுள்ளார்.

இந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், 6 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக பெண் சாமியார் பிரக்யா கைது செய்யப்பட்டிருப்பது தேர்தல் தந்திரம் அல்லாமல் வேறெதுமில்லை என்றும்,தேர்தல் நடந்து முடிந்துவிட்டால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறினார்.

மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் நடத்தும் விசாரணையைப் பற்றி குறிப்பிட்ட சுஷ்மா,லஷ்கர் தீவிரவாதிகளைவிட பெண் சாமியார் பிரக்யா பயங்கரமானவர் என்று சித்தரிக்க முயற்சிப்பதாக கூறினார்.

காவி மீதும் ராணுவம் மீதும் மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள்.ராணுவத்தினர் மீது போலீசார் கை வைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.இல்லாவிட்டால் அது கலகத்திற்கு வழி வகுத்துவிடும் என்றும் சுஷ்மா கூறினார்.

பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக சாடிய சுஷ்மா, ஒரு புறம் மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியாருக்கு 'நார்கோ அனலிஸஸ்' சோதனை நடத்தும் அரசு மற்றொரு புறம் நாடாளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை நிறைவேற்றாமல் உள்ளது என்று குற்றம்சாற்றினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மத்திய அரசு உத்தரவை மீறியது ஒரிஸ்ஸா
வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடம்
" 'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு "
ச‌ட்டீஸ்க‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌மீது தாக்குதல்: பொ‌றியாள‌ர் ப‌லி!
நிலவில் தேசியக்கொடியை நிலைநாட்டியது சந்திரயான்!
நொய்டா: குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் காயம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...