|
| மத்திய அரசு உத்தரவை மீறியது ஒரிஸ்ஸா |
| புவனேஸ்வர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 13:42 IST ) | |
மத்திய அரசின் உத்தரவையும் மீறி புவனேஸ்வரில் இன்று சங் பரிவார் அமைப்புகள் கண்டன பேரணி நடத்த ஒரிஸ்ஸா மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத் தலைவர் லக் ஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அங்கு தற்போதுதான் ஓரளவு அமைதி திரும்பியுள்ளது.
இந்நிலையில், லக் ஷ்மானந்தாவை கொன்றவர்களை பிடிக்காததை கண்டித்து நவம்பர் 15 ஆம் தேதியன்று ( இன்று ) கண்டன பேரணி நடத்தப்போவதாக சங் பரிவார் அமைப்புகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.
இது குறித்த தகவலறிந்ததும், கண்டன பேரணிக்கு அனுமதி அனுமதியளித்தால் மீண்டும் மத மோதல்களுக்கு வழி வகுக்கும் என்பதால் கண்டன பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று ஒரிஸ்ஸா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு உத்தரவை மீறி கண்டன பேரணிக்கு ஒரிஸ்ஸா அரசு அனுமதியளித்துள்ளது.
தலைநகர் புவனேஸ்வரில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான சங் பரிவார் தொண்டர்கள் திரள துவங்கிவிட்டனர்.
சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் சாதுக்கள் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பதாக சங் பரிவார் அமைப்பு தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கண்டன பேரணி காரணமாக மாநிலம் முழுவதும் குறிப்பாக ஏற்கனவே கலவரம் நடைபெற்ற காந்தமாலில் பதற்றம் காணப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|