யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
" 'சிமி' யை ஒழித்துக் கட்டவே மாலேகாவ் குண்டு வெடிப்பு "
பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008   ( 11:24 IST )
நாட்டில் பல்வேறு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் ' சிமி' இயக்கத்தை ழித்துக் கட்டவே, மாலேகாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக, கைது செய்யப்பட்ட ராணுவ உயரதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடத்தப்பட்ட 'நார்கோ அனலைஸிஸ் ' ( ஆழ்நிலை மயக்க நிலை விசாரணை ) சோதனையில் இதனை தெரிவித்துள்ள அவர், நாட்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் தமக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் மற்றும் துறவி தயானந்த பாண்டே ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே தாம் இதனை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மாலேகாவ் குண்டுவெடிப்பை எப்படி நிகழ்த்துவது என்பதற்கான சதித்திட்டத்தை தாமும், ( புரோஹித்), பெண் சாமியார் பிரக்யா, தயானந்த் பாண்டே ஆகியோர் தயாரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டில் நான்டட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலும் பாண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அஜ்மீர் குண்டுவெடிப்பும் தயானந்த் பாண்டேவால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது.இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட சுமார் 500 பேருக்கு அகமதாபாத் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புரோஹித் தெரிவித்ததாக காவல் துறையை மேற்கோள்காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ச‌ட்டீஸ்க‌ரி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர் ‌மீது தாக்குதல்: பொ‌றியாள‌ர் ப‌லி!
நிலவில் தேசியக்கொடியை நிலைநாட்டியது சந்திரயான்!
நொய்டா: குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் காயம்
சட்டீஸ்கர் தேர்தல்: போலீஸ்-மாவோயிஸ்ட் மோதல்!
முன்னாள் அமைச்சர் அஜீத் பாஞ்சா மரணம்
சட்டீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...