|
| சட்டீஸ்கரில் ஹெலிகாப்டர் மீது தாக்குதல்: பொறியாளர் பலி! |
| ராய்ப்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 09:16 IST ) | |
சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் வன்முறைகளின் உச்சக்கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் விமானப் பொறியாளர் பலியானார்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் நேற்று முதல்கட்டத் தேர்தல் நடந்தது. நக்சலைட் தீவிரவாதிகளின் எச்சரிக்கையையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டதால், பெரும்பாலான பகுதிகளில் நக்சலைட்கள் நேற்று வன்முறையில் இறங்கினர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்ளை, கண்ணிவெடித் தாக்குதல், போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை என நக்சலைட்கள் நடத்திய வன்முறை சம்பவங்களால் போலீசார் திணறிப்போனார்கள்.
வாக்குப்பதிவை தடுக்கும் விதமாக பல்வேறுப் பகுதிகளில் சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டு, தடைகளை ஏற்படுத்தியதால் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து வரப்பட்டன. இதன் காரணமாக, நேற்றைய முதல்கட்டத் தேர்தல் மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.
பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பீடியா என்ற இடத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு எம்.ஐ -8 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. இதன் மீது நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதில் இருந்த விமானப் பொறியாளர் குண்டு பாய்ந்து பலியானார்.
பல்வேறு வன்முறைகளுக்கு மத்தியில் நேற்று நடந்துமுடிந்த முதல்கட்ட தேர்தலில் 53 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|