|
| நிலவில் தேசியக்கொடியை நிலைநாட்டியது சந்திரயான்! |
| சென்னை(ஏஜென்சி), 15 நவம்பர் 2008 ( 08:53 IST ) | |
சந்திரனுக்கு ஏவப்பட்ட ஆளில்லாத விண்கலமான சந்திராயன், நிலவின் மேற்பரப்பில் இந்திய தேசியக்கொடியை பதித்து சாதனை படைத்தது.
சந்திராயனுக்கு ஆளில்லாத விண்கலம் அனுப்பும் முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. கடந்த 12ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் 100 கி.மீ. தொலைவில் சந்திராயன் நிலை நிறுத்தப்பட்டது.
இதன் இறுதிக்கட்டமாக, விண்கலத்தில் உள்ள 11 ஆராய்ச்சிக் கருவிகளில் ஒன்றான, "மூன் இம்பாக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) நேற்றிரவு 8.06 மணியளவில் விண்கலத்திலிருந்து பிரிந்தது. பெங்களூரில் உள்ள, "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்து இதற்கான உத்தரவு சந்திரயான் செயற்கைகோளுக்கு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவின்படி, 'மூன் இம்பாக்ட் புரோப்' நிலவை நோக்கி 25 நிமிட நேரம் பயணித்து சரியாக இரவு 8.31 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கியது. பின்னர், இந்திய தேசியக்கொடியை அங்கு பறக்கவிட்டது.
இதன் மூலம், நிலவில் தங்களது நாட்டு தேசியக்கொடியை நிலைநாட்டிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
உலகளவில் மிகப்பெரிய சாதனையாக வர்ணிக்கப்படும் இந்நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள "டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திலிருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் ஆகியோர் பார்வையிட்டனர்.
'மூன் இம்பாக்ட் புரோப்' கருவி நிலவை நோக்கிச் சென்ற 25 நிமிட பயணத்தின்போது, நிலவின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை புகைப்படம் எடுத்து சந்திரயானுக்கு அனுப்பி, அங்கிருந்து பெங்களூரு, பைபாலு கிராமத்தில் உள்ள "இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்' மையத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தது.
இனி நிலவை பார்க்கும் ஒவ்வொரு இந்தியனும் அங்கு நம் நாட்டு தேசியக்கொடி பறப்பதை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
திட்டமிட்டப்படி, சந்திராயன் விண்கலத்தின் அனைத்துப் பணிகளிலும் சிறப்பாக நடந்து முடிந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த திட்டம் வெற்றிக்கரமாக அமைந்ததற்கு நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|