|
| நொய்டா: குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் காயம் |
| நொய்டா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 15:13 IST ) | |
நொய்டாவில் சிறிய ரக குண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் மிகவும் பரபரப்பாக காணப்படும் 12-22 செக்டர்களுக்கு இடையே உள்ள குப்பை மேட்டிலிருந்து இன்று மதியம் சுமார் 1 மணியளவில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.
இதில், அந்த வழியே சென்ற 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து தீவிரச் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் எதிரொலியாக டெல்லி நகர போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|