|
| சட்டீஸ்கர் தேர்தல்: போலீஸ்-மாவோயிஸ்ட் மோதல்! |
| ராய்ப்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 11:53 IST ) | |
சட்டீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், போலீசாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்டமாக 39 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இன்றையத் தேர்தலில் சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங், சபாநாயகர் பிரேம் பிரகாஷ் பாண்டே, எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர கர்மா, பிஜேபி தேசிய செயலாளர் சரோஜ் பாண்டே, அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோராவின் மகன் அருண் வோரா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
8,879 வாக்குச்சாவடிகளில் சுமார் 64 லட்சம் வாக்காளர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.
இதற்கிடையே, நேற்றிரவு தாண்டேவாடா பகுதி காங்கிரஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால், பல பகுதிகளில் வாக்காளர்கள் குறைந்த அளவே வந்திருந்தனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது. சில பகுதிகளில் 8 மணிக்கு துவங்கியது.
தாண்டேவாடா தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், சில வாக்குச்சாவடிகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீரென புகுந்து ஓட்டு இயந்திரங்களை தூக்கிச் சென்றனர். இதனால், 5 மாவட்டங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும், மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சுக்மா, கிஸ்தாராம், கோன்டா உள்ளிட்ட 15 இடங்களில் இருதரப்பினருக்கும் இடையே சண்டை நடந்தது.
கோன்டா தொகுதியில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உள்பட சுமார் 65 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தும் பெரும்பாலான தொகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடியது. பல இடங்களில் சாலைப் போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தன.
இதன் காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் மந்தமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாநிலத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|