யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
முன்னாள் அமைச்சர் அஜீத் பாஞ்சா மரணம்
கொல்கட்டா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008   ( 11:21 IST )
முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அஜீத் பாஞ்சா கொல்கட்டாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.

உணவுக் குழல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அஜீத் பாஞ்சா, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைகளுக்குப் பலனின்றி இன்று காலை 4.30 மணியளவில் அஜீத் பாஞ்சாவின் உயிர் பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் மத்திய கொல்கட்டாவில் உள்ள கிரீஷ் பார்க் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி உட்பட பலர் பாஞ்சாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக அஜீத் பாஞ்சா பதவி வகித்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சட்டீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது
தேசிய மதுப்பழக்க தடுப்புக் கொள்கை அமல்படுத்த முடிவு
ராணுவம் மூலமே தீர்வு : ராஜ பக்ச திட்டவட்ட அறிவிப்பு
நாளை நிலவில் இந்திய தேசியக்கொடி நாட்டப்படுகிறது
சட்டீஸ்கரில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு
உல்ஃபா மீதான தடை நீக்கம் நீட்டிப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...