|
| சட்டீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது |
| ராய்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 10:05 IST ) | |
இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் சட்டீஸ்கர் மாநிலத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
சட்டீஸ்கரில் முதல்வர் ராமன்சிங் தலைமையில் பாஜக அரசு பதவியில் உள்ளது. அதன் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 90 இடங்களைக் கொண்டுள்ள சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ச்சியாக மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. குறிப்பிட்ட 12 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெறும்.
மொத்தம் உள்ள 15.2 மில்லியன் வாக்காளர்களில் 6.4 மில்லியன் பேர் இன்றைய தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கென 8,883 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தலில் 36 பெண்கள் உட்பட மொத்தம் 379 பேர் களத்தில் உள்ளனர். முதல்வர் ராமன்சிங், எதிர்க்கட்சித் தலைவர் மகேந்திர சர்மா, சபாநாயகர் பிரேம் பிரகாஷ் பாண்டே மற்றும் மாநில அமைச்சர்கள் பலரின் தலையெழுத்து இன்றைய தேர்தல் வாயிலாக நிர்ணயிக்கப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பதற்றம் நிறைந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதலாக பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|