|
| மீரட்டில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி |
| மீரட் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 17:14 IST ) | |
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீரட் நகரின் ஹப்பூர் சாலையில் உள்ள ஜாகீர் நகர் பகுதியில் மாலை 4 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் 5 முதல் 6 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடித்தது குண்டா அல்லது வெடிவிபத்தா என்பது குறித்த தெளிவான தகவல் தெரியவரவில்லை.
இருப்பினும் ,அப்பகுதியில் உள்ள குப்பை பொறுக்கும் சிலர் ஒரு பொருளை திறக்க முயன்ற போது குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக ஒரு தரப்பு தகவல் தெரிவிக்கின்ற நிலையில், வீடு ஒன்றில்தான் வெடி சத்தம் கேட்டதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|