யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அல்லலில் ஈழத் தமிழர்கள் : அம்பலப்படுத்துகிறார் சி்ங்கள எம்.பி
புதுடெல்லி / கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008   ( 14:02 IST )
இலங்கையில் நடைபெற்று வரும் போரினால், வவுனியாவில் ஒன்றரை லட்சம் மிழர்கள் உணவு மற்றும் உறைவிடம் இல்லாமல் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி வந்துள்ள சிங்கள எம்.பி.ஜெயலத் ஜெயவர்த்தனா அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், போரினால் அல்லலுறும் தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்வதையும், குண்டுவீச்சினால் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்து இருப்பதையும் புகைப்படங்கள் ஆதாரங்களுடன் வெளியிட்ட அறிக்கை :

வவுனியாவுக்குச் செல்லும் பிரதான பாதை (ஏ-9) முற்றிலும் மூடப்பட்டுள்ளது.இதனால் வவுனியாவில் உள்ள தமிழர்கள் அகதிகளாகியுள்ளனர்.தண்ணீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

வன்னியில் ஒன்றரை லட்சம் பேர் அதிகளாக்கப்பட்டுள்ளதாக அங்கு சென்று ஆய்வு நடத்தி வந்த மன்னார் பாதிரியார் ராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.இலங்கை ராணுவத்தின் ஆர்ட்டில்லரி தாக்குதல்கள், வான் தாக்குதல்கள், ராணுவத் தாக்குதல்களால் இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் நிலை மிக மிக பரிதாபமாக உள்ளது.அங்கு பல வெளிவராத அதிர்ச்சியான உண்மை நிலவரங்கள் அதிர வைப்பதாக உள்ளது.குழந்தைகள் அனைவருமே நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி, பருப்பு, சீனி என எந்த வகையான உணவுப் பொருளும் சரிவர கிடைப்பதில்லை.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மலேரியா உள்ளிட்ட நோய்களாலும்,தொற்று நோய்களாலும் பீடிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இவர்கள் வசித்துக் கொண்டுள்ளனர்.

விவசாயம், மீன் பிடி என எந்தத் தொழிலும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை.கிட்டத்தட்ட அடிமைகள் போன்ற நிலையில் இங்குள்ள தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர்.அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக சேவையாளர்கள், தொண்டு நிறுவனத்தினர்,மத குருக்கள் என யாருமே இங்கு சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசு மிக மிகக் குறைந்த அளவிலேயே விநியோகித்து வருகிறது.இங்குள்ளவர்களுக்கு விரைவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்காவிட்டால் இவர்களின் நிலை மிகவும் மோசமாகி விடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோமாநாத் சாட்டர்ஜி
ஓமன் பயணமானார் பிரதமர் மன்மோகன்
ராஜினாமாவுக்கு தயார் : அமைச்சர் ராசா அறிவிப்பு
'மாலேகாவ் : ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை'
குண்டு வெடிப்பு : மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு ?
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...