|
| ராஜினாமாவுக்கு தயார் : அமைச்சர் ராசா அறிவிப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 நவம்பர் 2008 ( 09:36 IST ) | |
`ஸ்பெக்ட்ரம்'எனப்படும் செல்போன் சேவை தொடர்பான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக என்று மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
மொபைல் சர்வீசுக்கு தேவையான 2 ஜி `ஸ்பெக்ட்ரம்'ஒதுக்கீட்டில், செல்போன் சேவையிலேயே ஈடுபடாத `ஸ்வான் டெலிகாம்' மற்றும் யுனிடெக்' ஆகிய இரு நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒதுக்கீடு செய்ததாகவும், அந்த நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவையே செய்யாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை, அப்படியே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்டியுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாற்று எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாற்றை ராசா ஏற்கனவே மறுத்திருந்தபோதிலும்,ஏற்கனவே நடந்த ஏலத்தை ரத்து செய்து விட்டு, புதிதாக ஏலம் விட வேண்டும் என்றும், இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நேற்று அமைச்சர் ராசா மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், `ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பின் பரிந்துரைகள் முழுக்க, முழுக்க கடைப்பிடிக்கப்பட்டு, முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜி2 சேவை தொடங்குவதற்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், முறைகேடாக எந்த ஒதுக்கீடும் நடைபெறவில்லை என்றும் மீண்டும் தனது நிலையை தெளிவுப்படுத்தினார்.
இருப்பினும், சட்டத்துக்கு புறம்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், தொலைதொடர்புத் துறை அமைச்சகம் சட்டத்தை மீறி நடந்து இருந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து, ஸ்பெக்டர்ம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் ஏற்கனவே தாம் விளக்கம் அளித்ததாகவும் கூறினார்.
அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றது குறித்து விசாரணை நடத்தும்படி தொலை தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் தொலைபேசி சேவையை மேம்படுத்துவதற்காகவே தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கப்பட்டது.இந்த நடவடிக்கையால் தனியார் நிறுவனங்கள் சேவை தொடங்கிய உடனேயே அரசுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று ராசா மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|