|
| 'மாலேகாவ் : ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை' |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 17:25 IST ) | |
மாலேகாவ் குண்டு வெடிப்பு தொடர்புடைய ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும், இது தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டுவதில் அரசு மிகவும் உறுதியாக உள்ளதாகவும் கூறினார்.
இந்த ( மாலேகாவ் குண்டு வெடிப்பு ) வழக்கில் மகாராஷ்ட்ரா காவல் துறையின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.அந்த அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தோணி மேலும் தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பில் மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறதே எனக் கேட்டபோது, அதற்கு நேரிடையாக பதிலளிப்பதை தவிர்த்த அந்தோணி, எந்தவித தயக்கமும் இல்லாமல் விசாரணைக்கு ராணுவம் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்து வருவதாக பதிலளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|