யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
குண்டு வெடிப்பு : மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு ?
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 15:45 IST )
மாலேகாவ் குண்டு வெடிப்பில் மேலும் பல ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கான சதித்திட்டத்தை தீட்டியது மற்றும் அதற்கு தேவையான குண்டுகள் உள்ளிட்ட வெடி மருந்துகளை அளித்ததிலும் தமக்குள்ள தொடர்பை ராணுவத்தில் தற்போது பணிபுரியும் அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித், விசாரணையின்போது ஒப்புக் கொண்டதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்த தமக்கு மேலும் பல ராணுவ அதிகாரிகளும் உதவியதாக அவர்களது பெயர்களை விசாரணையின்போது புரோகித் தெரிவித்ததாகவும், எனவே அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது 3 ராணுவ அதிகாரிகளிடமாவது விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ராணுவத்திடமிருந்து உரிய அனுமதி கிடைத்ததும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறியதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
இந்தியர்-வடஇந்தியர்; என்ன வேறுபாடு?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை: தேஷ்முக்
காங்.தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை : மார்க்ரெட் ஆல்வா புகார்
12-ல் மன்மோகனுடன் ராஜபக்சே சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...