யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்பு : ராணுவ அதிகாரி ஒப்புதல்
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008   ( 13:35 IST )
மாலேகாவ் குண்டுவெடிப்பில் தமக்கு தொடர்புள்ளதை கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று மாலேகாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புக்கான சதித் திட்ட வரைவை தாம்தான் தயாரித்துக் கொடுத்ததோடு,அதற்கு தேவையான வெடி மருந்துகள் உள்ளிட்டவைகளையும் அளித்ததாகவும் விசாரணையில் புரோகித் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலேகாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரகியா தாகூர், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான ரமேஷ் உபாத்தியா மற்றும் ஷரத் குல்கர்னி ஆகியோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு ராணுவத்தில் தற்போது பணிபுரியும் ஸ்ரீகாந்த் புரோகித்துடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து புரோகித்தை கடந்த 5 ஆம் தேதியன்று மகாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில்,விசாரணையில் குண்டுவெடிப்பில் தமக்குள்ள தொடர்பை புரோகித் ஒப்புக் கொண்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா!
இந்தியர்-வடஇந்தியர்; என்ன வேறுபாடு?: சுப்ரீம் கோர்ட் கேள்வி
காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை: தேஷ்முக்
காங்.தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை : மார்க்ரெட் ஆல்வா புகார்
12-ல் மன்மோகனுடன் ராஜபக்சே சந்திப்பு
மகாராஷ்ட்ரா வன்முறை : பிரதமரை சந்திக்கிறார் தேஷ்முக்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...