|
| மும்பை தாக்குதல்: 5 பீகார் எம்.பிக்கள் ராஜினாமா! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:29 IST ) | |
மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும், ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மாண் சேனா கட்சியினர் வட மாநிலத்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம், மும்பைக்கு ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
தீபாவளி தினத்தில், பஸ்சை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டி, பீகார் இளைஞர் ஒருவரை போலீசாரே சுட்டுக்கொன்றனர். மறுநாள், ஓடும் ரயிலில் உ.பி. வாலிபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில அரசோ, மத்திய அரசுசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் லாலு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட வட மாநில தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும், ராஜ் தாக்கரேவை கைது செய்ய வலியுறுத்தியும் தங்களது கட்சியை சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த லாலு,எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பெற்று வருகிறார்.
அதேபோன்று, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பிரபுநாத் சிங், ஜார்ஜ் பெர்ணான்டஸ், ராஜீவ் ரஞ்சன் சிங் லல்லன், கைலாஷ் பைத்தா மற்றும் மீனாசிங் ஆகிய 5 பேர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதுதொடர்பான கடிதங்களை அவர்கள், மக்களவை செயலாளரிடம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|