|
| இந்தியர்-வடஇந்தியர்; என்ன வேறுபாடு?: சுப்ரீம் கோர்ட் கேள்வி |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 13:07 IST ) | |
'இந்தியர்களுக்கும், வட இந்தியர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?' என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், 'நாம் அனைவருமே இந்தியர்தான்' என கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவருக்கு எதிராக ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசும் இது தொடர்பாக எந்த நவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பஸ்சை கடத்த முயன்றதாக கூறி பீகார் வாலிபர் ராகுலை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நீதி விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "வட இந்தியர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?" என்று கேள்வி எழுப்பினர்.
"நாம் அனைவருமே இந்தியர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரும் மக்களுக்கு இடையே எந்த வேறுபாடுகளும் இல்லை" என்று என்றும் நீதிபதிகள் கூறினர்.
மகாராஷ்டிராவில், வடமாநிலத்தவருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில அரசுக்கு உத்தரவிட, மத்திய அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|