|
| காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை: தேஷ்முக் |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:51 IST ) | |
மகாராஷ்டிர மாநில காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து, சிறுபான்மை கல்வி கூட்டமைப்பின் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுவார். இதன் மூலம், முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறை பணியில் சேர மேலும் வாய்ப்புகள் உருவாகும்.
எனவே, முஸ்லிம் இளைஞர்கள் உருது மொழியுடன் மராத்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இது, அவர்கள் காவல்துறை பணியில் சேர மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|