|
| காங்.தேர்தல் டிக்கெட்டுகள் விற்பனை : மார்க்ரெட் ஆல்வா புகார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 11:38 IST ) | |
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மார்க்ரெட் ஆல்வா குற்றம் சாற்றியுள்ளார்.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தேர்தல் டிக்கெட் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், தகுதியே இல்லாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 6 க்கும் அதிகமான மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக உள்ள மார்க்ரெட் ஆல்வா, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாநிலங்களில் மத்தியபிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தேர்தல் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார்.
மேற்கூறிய இந்த 4 மாநிலங்களிலும் 12 க்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் உறவினர்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்ற கர்நாடகாவில் எனது மகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப்பின் பேரனுக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை.
எனது மகனோ அல்லது ஜாபர் ஷெரீப்பின் பேரனோ தேச விரோதிகளா, தீவிரவாதிகளா அல்லது கடத்தல்காரர்களா என்ன ? என்று ஆல்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், ஆல்வாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான பிரித்விராஜ் சவானிடம் கேட்டபோது, இந்த குற்றச்சாற்றை மறுத்ததோடு, இது ஆல்வாவின் விரக்தியையே காட்டுவதாக உள்ளது என்று பதிலளித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|