|
| 12-ல் மன்மோகனுடன் ராஜபக்சே சந்திப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 10:47 IST ) | |
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே வரும் 12 ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு இடையே விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உண்டாக்குவது தொடர்பாக விவாதிக்க, டெல்லியில் வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள் மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் தாய்லாந்து, மியான்மர், இலங்கை, பங்களாதேஷ், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக வரும் 12 ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லிக்கு வருகிறார். அன்றைய தினமே பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போர், அங்குள்ள தமிழர்கள் போரினால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மன்மோகன் சிங்கிடம் ராஜபக்சே விளக்குவார் எனத் தெரிகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அனுப்பும் நிவாரண உதவிப் பொருட்களை பகிர்ந்து அளிப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சண்டையில் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதாகவும், போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|