யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நாளை வட மாநிலத்தவரின் சாத் பூஜை: மும்பையில் பீதி
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 15:12 IST )
வட மாநிலத்தவருக்கான சாத் பூஜை நாளை கொண்டாடப்படுவதால் மும்பையில் பதற்றம் நிலவுகிறது.

வட மாநிலங்களில் சூரியக்கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சாத் பூஜை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சாத் பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. மும்பையில் ஜுகு கடற்கரை, கிர்காம் சங்பதி, தானே கிரேக், தாதர் உள்ளிட்ட பல இடங்களில் சாத் பூஜை நடத்தப்படும். இதில், லட்சக்கணக்கான வட மாநில மக்கள் பங்கேற்பர்.

இந்த பூஜையில் பங்கேற்பதற்காகவே, பீகார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் மும்பை நகருக்கு வருவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக, மும்பையில் வசிக்கும் வட மாநிலத்தவர் மீது ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தற்போது அரசியல் ரீதியான பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.

ந்நிலையில், நாளை சாத் பூஜை கொண்டாட்டத்தின் போது, ராஜ் தாக்கரே கட்சியினர் மீண்டும் தாக்குதலில் ஈடுபடலாம் என்பதால், மும்பையில் கடும் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக, மும்பை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புத்ததேவ் மீது தாக்குதல் : 8 பேர் கைது
மகாராஷ்ட்ராவுக்கு பீகார் நற்சான்றிதழ் தேவையில்லை : காங்.
அஸ்ஸாம்: எல்லைத் தாண்டிய தீவிரவாதமே காரணம்!
மும்பை தாக்குதல்: லாலு கட்சியினர் பதவி விலக முடிவு!
நக்சலைட் தாக்குதல்: புத்ததேவ், பஸ்வான் தப்பினர்
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 4 பேர் கைது
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...