|
| புத்ததேவ் மீது தாக்குதல் : 8 பேர் கைது |
| கோல்கத்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008 ( 14:54 IST ) | |
மேற்குவங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரை குறிவைத்து நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தில் மாவோஸ்ட் ௦தீவிரவாதிகள் நடமாட்டம் அதிமுள்ள மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 'ஜிந்தல் ஸ்டீல் பிளான்ட்' திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மற்றும் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் பஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டுவிட்டு, தனித்தனி கார்களில் திரும்பி கொண்டிருந்தனர்.
பரோவா என்ற இடத்தில் அவர்களது கார் வந்தபோது, பாலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி, வெடித்துச் சிதறியது. பஸ்வான் மற்றும் புத்ததேவின் கார்கள் பாலத்தை கடந்த சென்ற நிலையில், இந்த தாக்குதல் நடந்ததால் அவர்கள் இருவரும் மயிரிழையில் உயிர்தப்பினர்.
எனினும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் 6 பேர் இதில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.அவர்களது காரும் தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து தீவிர புலனாய்வு மேற்கொண்ட போலீஸார், 8 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் ஐஜி ராஜ் கனோஜியா இன்று தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள பகதுதலா உள்ளிட்ட சில கிராமங்களில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இதில் இந்த 8 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சிதறல்களை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றியுள்ளதாகவும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த குண்டு வெடிப்பில் ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் நிபுணர்கள் பரிசோதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|