யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மகாராஷ்ட்ராவுக்கு பீகார் நற்சான்றிதழ் தேவையில்லை : காங்.
மும்பை (ஏஜென்சி), 3 நவம்பர் 2008   ( 12:36 IST )
மகாராஷ்ட்ராவுக்கு பீகாரின் நற்சான்றிதழ் தேவையில்லை என்று மகாராஷ்ட்ர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.

மும்பையில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்சனையில் மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை கைது செய்யக் கோரி பீகார் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்ராவ் தாக்கரே, இப்பிரச்சனையில் மகாராஷ்ட்ரா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார்.

அத்துடன் மகாராஷ்ட்ராவுக்கு பீகார் தலைவர்களின் நற்சான்றிதழ் தேவையில்லை என்றும், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச தலைவர்கள் மகாராஷ்ட்ராவின் சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படுவதைவிட தத்தமது மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படட்டும் என்றார்.

சிவசேனா வாக்கு வங்கியை பிளவுப்படுத்துவதற்காக ராஜ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் மறைமுகமாக ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாற்றை மறுத்த அவர், இதுபோன்ற பிரச்சனைகளில் காங்கிரசுக்கென்று சில சொந்த செயல்திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் மாநிலம் மற்றும் நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க உதவுமாறு ராஜ் தாக்கரே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஸ்ஸாம்: எல்லைத் தாண்டிய தீவிரவாதமே காரணம்!
மும்பை தாக்குதல்: லாலு கட்சியினர் பதவி விலக முடிவு!
நக்சலைட் தாக்குதல்: புத்ததேவ், பஸ்வான் தப்பினர்
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 4 பேர் கைது
கு‌ண்டு வெடி‌ப்பு குற்றவாளிகள் மீது நடவடிக்கை: மன்மோகன்
வன்முறை: பிரதமர் உத்தரவுக்கு கட்டுப்படாத மகாராஷ்டிரா!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...