யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மும்பை தாக்குதல்: லாலு கட்சியினர் பதவி விலக முடிவு!
பாட்னா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 09:37 IST )
வட மாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தி வரும் ராஜ் தாக்கரேவை கைது செய்யாவிட்டால், தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவர் என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் வட மாநிலத்தவர்கள் மீது ராஜ் தாக்கரேவின் நவநிர்மான் கட்சியின் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாணவரை அடித்துக்கொன்றது, பஸ்சைக் கடத்த முயன்றதாக, பீகார் இளைஞர் ராகுல் ராஜை சுட்டுக் கொன்றது, ஓடும் ரயிலில் உ.பி. வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ரயில்வே அமைச்சர் லாலு, மத்திய உரத்துரை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து புகார் தெரிவித்ததோடு, ராஜ் தாக்கரேக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எனினும், அதற்கு பெரிய அளவிலான பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் லாலு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 27ம் தேதி பீகாரைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினரும், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினோம். அப்போது, ராஜ் தாக்கரே கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அதன்படி எதுவும் நடக்கவில்லை.

எனவே, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். இல்லையெனில், எங்கள் கட்சியைச் சேர்ந்த 24 லோக்சபா எம்.பி.க்கள், 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள், 55 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 15 எம்.எல்.சி.,க்கள் ஆகிய அனைவரும் நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது பதவியை ராஜினாமா செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, லாலுவின் எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, "வடமாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அவை எல்லாம் செய்யப்பட்டுள்ளன. லாலு கட்சியினரின் ராஜினாமாவால், எந்தப் பிரச்னையும் தீர்ந்துவிடாது" எனத் தெரிவித்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நக்சலைட் தாக்குதல்: புத்ததேவ், பஸ்வான் தப்பினர்
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 4 பேர் கைது
கு‌ண்டு வெடி‌ப்பு குற்றவாளிகள் மீது நடவடிக்கை: மன்மோகன்
வன்முறை: பிரதமர் உத்தரவுக்கு கட்டுப்படாத மகாராஷ்டிரா!
மாலேகாவ் கு‌ண்டுவெடி‌ப்பு: ராணுவ‌ப் ப‌ள்‌ளி கமா‌ண்ட‌ர் கைது
தேர்தலை புறக்கணிக்க அழைப்பு : யாசின் மாலிக் கைது
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...