யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நக்சலைட் தாக்குதல்: புத்ததேவ், பஸ்வான் தப்பினர்
கோல்கத்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 3 நவம்பர் 2008   ( 09:04 IST )
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர். இதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் மாவோஸ்ட் ௦தீவிரவாதிகள் நடமாட்டம் அதிமுள்ள மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் 'ஜிந்தல் ஸ்டீல் பிளான்ட்' திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

இதில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மற்றும் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் பஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டுவிட்டு, தனித்தனி கார்களில் திரும்பி கொண்டிருந்தனர்.

பரோவா என்ற இடத்தில் அவர்களது கார் வந்தபோது, பாலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி, வெடித்துச் சிதறியது. பஸ்வான் மற்றும் புத்ததேவின் கார்கள் பாலத்தை கடந்த சென்ற நிலையில், இந்த தாக்குதல் நடந்ததால் அவர்கள் இருவரும் மயிரிழையில் உயிர்தப்பினர்.

எனினும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் 6 பேர் இதில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது காரும் தீப்பிடித்து எரிந்தது.

போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் இந்த தாக்குதல் நடந்திருப்பது காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் டெல்லி சென்ற பஸ்வான், தனது பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 4 பேர் கைது
கு‌ண்டு வெடி‌ப்பு குற்றவாளிகள் மீது நடவடிக்கை: மன்மோகன்
வன்முறை: பிரதமர் உத்தரவுக்கு கட்டுப்படாத மகாராஷ்டிரா!
மாலேகாவ் கு‌ண்டுவெடி‌ப்பு: ராணுவ‌ப் ப‌ள்‌ளி கமா‌ண்ட‌ர் கைது
தேர்தலை புறக்கணிக்க அழைப்பு : யாசின் மாலிக் கைது
முதல் படத்தை அனுப்பியது சந்திராயன் விண்கலம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...