|
| அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: 4 பேர் கைது |
| கவுகாத்தி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 13:14 IST ) | |
அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி மற்றும் மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 81 பேர் பலியாகினர். 400க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், இந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அகமதாபாத், டெல்லி நகர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வரும் தவுகீர் மற்றும் ஜஹாங்கீர் ஆகியோருக்கு, இந்த சம்பவத்திலும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|