யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
வன்முறை: பிரதமர் உத்தரவுக்கு கட்டுப்படாத மகாராஷ்டிரா!
மும்பை (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 19:12 IST )
வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவு பிறப்பித்த நிலையில், "பிற மாநிலங்களை விட தங்களது மாநிலத்தில் பாதுகாப்பு அதிகமாகவே உள்ளது" என்று பதிலடி கொடுத்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு.

மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில், அக்கட்சியினர் வட மாநிலத்தவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், மும்பைக்கு ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் மாணவர் அடித்துக்கொல்லப்பட்டது, வேலை தேடி வந்த மற்றொரு பீகார் மாணவர் கடந்த வாரம் பஸ்ஸில் சுட்டுக்கொல்லப்பட்டது, மறுநாள் ஓடும் ரயிலில் உ.பி. இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் வட மாநிலத்தவர்கள் மத்தியில் கடும் பீதியை கிளப்பியுள்ளது.

ராஜ் தாக்கரே கட்சியினரின் இந்த கொலை வெறித் தாக்குதல்களை கட்டுப்படுத்த, முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்து வருகிறது.

இதுதொடர்பாக நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ராஜ் தாக்கரேவை கைது செய்ய வேண்டும் என்றும், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதன் எதிரொலியாக, முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஓர் கடிதம் அனுப்பினார். அதில், ராஜ் தாக்கரே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வட மாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருந்தார்.

ஆனால், பிரதமரின் இந்த கண்டிப்புக்கு மகாராஷ்டிரா அரசு தரப்பில் எந்த மரியாதையும் இல்லை.

பிரதமரின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்த, துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், "மகாராஷ்டிராவை விட வேறு எந்த மாநிலமும் பாதுகாப்பானது அல்ல. இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவது சிரிப்பைதான் வரவழைக்கிறது. இந்த மாநிலத்தில் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது" என்றார்.

இதிலிருந்து, மண்ணின் மைந்தன் கோஷத்தை கையில் எடுத்து ராஜ் தாக்கரே கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்துவதை, அம்மாநிலத்தை சேர்ந்த பிற கட்சியினரும் ஆதரிப்பதாகவே தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாலேகாவ் கு‌ண்டுவெடி‌ப்பு: ராணுவ‌ப் ப‌ள்‌ளி கமா‌ண்ட‌ர் கைது
தேர்தலை புறக்கணிக்க அழைப்பு : யாசின் மாலிக் கைது
முதல் படத்தை அனுப்பியது சந்திராயன் விண்கலம்
பிரதமர், சோனியா இன்று அஸ்ஸாம் பயணம்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பில்லை: ராசா
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: விசாரணை துவங்கியது
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...