|
| மாலேகாவ் குண்டுவெடிப்பு: ராணுவப் பள்ளி கமாண்டர் கைது |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008 ( 18:03 IST ) | |
மகாராஷ்ட்ர மாநிலம் மாலேகாவில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாசிக் நகரத்தில் உள்ள போன்சலா ராணுவப் பள்ளியின் ஓய்வு பெற்ற கமாண்டரான லெப்டினன்ட் கலோனல் சைலேஷ் ராய்கார் என்பவரை மகாராஷ்ட்ர பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
மாலேகாவில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக போன்சலா ராணுவப் பள்ளியில் நடந்த கூட்டத்தில் சைலேஷ் ராய்காரும் பங்கேற்றதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பிரக்யா சிங் தாகூர், சமீர் குல்கர்னி, ரமேஷ் உபத்யாய ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே போன்சலா ராணுவப் பள்ளியின் எழுத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|