|
| தேர்தலை புறக்கணிக்க அழைப்பு : யாசின் மாலிக் கைது |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008 ( 17:44 IST ) | |
சட்டசபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்க தலைவர் யாசின் மாலிக் இன்று கைது செய்யப்பட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு யாசின் மாலிக் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரது இந்த பிரச்சாரத்திற்காக போலீஸார் இன்று அவரை கைது செய்தனர்.
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், சிறைக் கூடம் தமக்கு இரண்டாவது வீடு போன்றது என்றும், தேர்தலை புறக்கணிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு உட்பட்டதுதான் என்றும், தேர்தலில் வாக்களிக்க மக்களுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அவ்வளவு உரிமை வாக்களிக்காமல் இருப்பதற்கும் உள்ளது என்று தேர்தல் ஆணையமே கூறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|