யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
முதல் படத்தை அனுப்பியது சந்திராயன் விண்கலம்
புதுடெல்லி(ஏஜென்சி), சனிக்கிழமை, 1 நவம்பர் 2008   ( 12:10 IST )
நிலவுக்கு இந்தியா அனுப்பிய ந்திராயன்1 விண்கலம் நிலவில் இருந்து பூமியை படமெடுத்து அனுப்பி உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான ( இஸ்ரோ ) கடந்த மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து முதன் முறையாக நிலவுக்கு சந்திராயன் - 1 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது.

இந்த விண்கலத்தில் டெர்ரைன் மேப்பிங் கேமரா எனப்படும் நவீன கேமரா உள்ளிட்ட 11 உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்திராயன்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த நவீன கேமரா பூமியை படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் படத்தில் ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரை பகுதியும், 12.30 மணிக்கு 70 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட 2ஆவது புகைப்படம் ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதியும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் பெங்களூர் அருகே உள்ள டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் பெறப்பட்டு இஸ்ரோவில் டேட்டா மையத்தில் படமாக்கப்பட்டது.
இந்த புகைப்படங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரதமர், சோனியா இன்று அஸ்ஸாம் பயணம்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பில்லை: ராசா
அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: விசாரணை துவங்கியது
சோனியா காந்திக்கு இ மெயிலில் கொலை மிரட்டல்
பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்க ஒப்புதல்
அஸ்ஸாம் குண்டு வெடிப்பு பலி 77 ஆக அதிகரிப்பு
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...