யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமர் தலைமையில் நாளை முதலமைச்சர்கள் மாநாடு
புதுடெல்லி (ஏஜென்சி), 12 அக்டோபர் 2008   ( 16:45 IST )
மதக் கலவரம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் நாளை அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடைவிதிப்பது குறித்தும் விவாதிக்கப்படும்.

உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் போதிய கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அல்போன்ஸாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப்
பிரதீபா பாட்டீலுக்கு கொலை மிரட்டல்!
ஏற்பாடுகள் தீவிரம் : அ‌க்.22-‌ல் ஏவ‌ப்படு‌கிறது சந்திராயன்
அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
ஆந்திரா மதக்கலவரம் : ஊரடங்கு நீட்டிப்பு
விமானத்தில் திடீர் புகை : 130 பேர் உயிர் தப்பினர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...