|
| பிரதீபா பாட்டீலுக்கு கொலை மிரட்டல்! |
| புனே(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 14:02 IST ) | |
புனேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை கொல்லப்போவதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு நேற்று முன் தினம் சென்ற பிரதிபா பாட்டீல், இன்று மாலை இளையோர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், பிரதிபா பாட்டீலை கொலை செய்யப் போவதாக இ-மெயில் மூலம் மகாராஷ்ட்ரா அரசுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ரூபத்திலும் வந்து பிரதிபா தாக்கப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து இந்த மிரட்டலை தொடர்ந்து பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் மிரட்டல் இ மெயிலை அனுப்பியவர் யார் என்பதை கண்டறிவதிலும் போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|