|
| ஏற்பாடுகள் தீவிரம் : அக்.22-ல் ஏவப்படுகிறது சந்திராயன் |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2008 ( 12:02 IST ) | |
நிலவிற்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் முதல் கனவுத் திட்டமான சந்திராயன்-1 விண்கலம் வருகிற அக்டோபர் 22 ஆம் தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது.
சந்தராயன் விண்கலத்தை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ முழுவீச்சில் செய்து வருகிறது. இதற்கான பிஎஸ்எல்வி சி11 ஏவுவாகனத்தோடு வரும் 14 ஆம் தேதி சந்தராயன் செயற்கைக்கோள் இணைக்கப்பட உள்ளது.
தமிழக எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுவாகனம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ஏவுவாகனத்தை ஒவ்வொரு நிலையாக பொருத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வில் மற்றும் ஒரு மைல்கல்லாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இந்தியா தயாராகி இருக்கிறது. பிஎஸ்எல்வி சி11 ராக்கெட் மூலம் சந்தராயன் விண்கலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த ஏவுவாகனம் 4 நிலையில் பொருத்தப்பட்டு, ஏவுதளம் அருகே உள்ள ஒருங்கிணைப்பு தளத்தில், செயற்கை கோளை பெற்று கொள்ள தயார் நிலையில் உள்ளது. தற்போது ஏவுவாகனம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டது. நடமாடும் ஏவுதளத்தில் அது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு வரும் 14ந் தேதி செயற்கைக்கோள் ஏவுவாகனத்தோடு இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 18ந் தேதி ஓடுபாதை வழியே ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு கடைசி கட்ட சோதனைகள் முடிக்கப்பட்டு, 52 மணி நேர கவுண்டவுன் துவங்கும்.
வானிலை ஒத்துழைக்கும் பட்சத்தில் 22ந் தேதி அதிகாலை 6.20 மணிக்கு சந்தராயன் விண்கலத்தோடு பிஎஸ்எல்வி சி11 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அகில இந்திய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
புவி மண்டலத்தை தாண்டி சந்தராயன் விண்கலம் தனது பயணத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்கில் நிலவில் வட்டப்பாதையில்செயற்கைக்கோளை நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|