யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
மும்பை(ஏஜென்சி), 11 அக்டோபர் 2008   ( 15:23 IST )
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 66 வது பிறந்த நாளாகும்.இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு முதலே உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இன்று காலையிலிருந்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அமிதாப் உடனடியாக முதலில் மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டது.அவற்றை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை உடனடியாக மும்பையின் பிரபல மருத்துவமனையான லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து அவர் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அமிதாப்பின் உடல் நிலை சீராக உள்ளதா என்பது குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிய வராத நிலையில், அவரது குடும்பத்தினரும் அமிதாப் உடல் நிலை குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே அமிதாப் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அமிதாப்பின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக, இன்று காலையிலேயே அவரது வீட்டு முன்னர் திரண்ட ரசிகர்களுக்கு,அமிதாப்பை அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஸ்வேதா ஆகியோர் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது.

கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பரிலும் அமிதாப் இதேபோன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆந்திரா மதக்கலவரம் : ஊரடங்கு நீட்டிப்பு
விமானத்தில் திடீர் புகை : 130 பேர் உயிர் தப்பினர்
காஷ்மீர் : முதல் ரயில் போக்குவரத்து: பிரதமர் துவக்கிவைத்தார்
தலாய் லாமா அக். 14 ல் டிஸ்சார்ஜ்
அக்.13ல் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு!
வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளது : ப. சிதம்பரம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...